உலகம்

அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு

அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.

கடுமையான மனநலப் பாதிப்பு

பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *