உலகம்
இஸ்ரேல் அதிரடி – அலி அல்-தாஹெர் மலையில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் வெளியேற்றம்

லெபனானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்த சுரங்கத்தில் இருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.
இருப்பினும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு உடனடியாக இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த மலைத்தொடரில் இருந்த சுரங்கப்பாதையில் போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த மலைத்தொடருக்குள் உள்ள தனது ஹிஸ்புல்லா கூட்டாளிகளின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு வலுவாகப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இவ்வாறு போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
![]()