இலங்கை

22 ஆவது திருத்தம் மூலம் நாட்டை சீர்குலைக்க முயற்சி; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் அரசாங்கம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. இதனை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஜனநாயக வழியில் உரிய நடவடிக்கைகளை எப்போதும் முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால்நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமாரவின் சர்வாதிகார போக்கை தோற்கடித்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடித்து நீதித்துறையை பாதுகாப்பதற்காகவே நாங்கள் இன்று வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றோம். 22ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்கில் செயற்படும் அநுரகுமார அரசாங்கம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க செயற்படுகின்றது. மக்களின் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுகின்றன. சட்டவாட்சி சீர்குலைக்கப்படுகின்றது. நீதியை நிலைநாட்டும் செயற்பாடும் அழிக்கப்படுகின்றது. இதனால் நாட்டுக்கு இருக்கும் ஒரே மாற்று வழியான ஐக்கிய மக்கள் சக்தியினால் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடிப்பதற்காக ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளையும் அன்றும் செய்தது இன்றும் செய்கின்றது, நாளையும் செய்யும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *