பலதும் பத்தும்

வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில்!

இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பால் அடிப்பகுதி பலவீனமடைந்து நொடிகளில் இடிந்து ஆற்றில் முழுவதும் மூழ்கியது. பல தலைமுறைகள் வழிபட்ட இந்த கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் கடும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது.

அப்பகுதியில் கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி சரிந்து விழுந்தது.

பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button