பலதும் பத்தும்

“வீடற்றவர்களுக்கு பாலியல் கூடாரங்கள்”

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சபை கூட்டத்தில், வீடற்றவர்களுக்காக வரிப்பணத்தில் தனியார் வசதியுடன் கூடிய பாலியல் கூடாரங்கள் அமைக்க வேண்டும் என்ற வினோதமான யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீடற்றவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள இதுபோன்ற பாலியல் கூடாரங்கள் உதவும் என கூட்டத்தில் பேசிய ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த யோசனை சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதுகுறித்த காணொளியும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தத் திட்டத்தை முன்வைத்த நபர், வீடற்றவர்களுக்குப் பாலியல் கூடாரங்கள் கூடிய சுகாதாரமான இடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற வசதிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும் எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால், இந்த யோசனைக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button