பலதும் பத்தும்

நேபாள பேரழிவு ; உலக நாடுகள் மீது குற்றம் சுமத்தும் அறிவியல் அறிஞர்கள்!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் செயல்களால் பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் .

வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 600-க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுவரை 400 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை அதிக மழை பெய்யாத பொழுது திடீரென நேபாளத்திற்கு வெள்ளம் எப்படி வந்தது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

நேபாளத்திற்கு மேற்பகுதியில் உள்ள சீன – திபெத் எல்லையை ஒட்டியுள்ள போடாகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிப்பாறைகள் தடுத்ததால் அங்கு ஒரு ஏரி உருவாகி உருவாகி, அதன்பின் அந்த ஏரி உடைந்ததால் அதிகளவிலான நீர் நேபாளத்திற்குள் புகுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஒருபக்கம், பனிப்பாறைகள் உருகியதற்கு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிற்து.

உலக அளவில் கரிமிலவாயுவை வெளியிடுவதில் (Carbon emissions) நேபாளத்தின் பங்கு 0.03 சதவீதம் மட்டுமே. அதாவது 0.1 சதவீதத்திற்கும் குறைவு.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் தொழிற்சாலைகள் மூலம் 61 சதவீத கரியமில வாயுவை காற்றில் வெளியிடுகின்றன.

அதனால் ஏற்படும் மாசு காரணமாக பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகியதால் அதற்கான பலனை நேபாளம் அனுபவித்திருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button