பலதும் பத்தும்

ஸ்பெயினில் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா!

ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.

வருடந்தோறும் நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவில், ஸ்பெயின் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்முடன் கலந்துகொள்வது வழக்கம்.

ஸ்பெயினில் உலகப் புகழ்பெற்ற

 

தெருக்களில் திரண்ட மக்கள், ஒருவர்மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் தக்காளிச் சாறினால் சிவப்பு நிறமாக மாறியது.

களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த பிரமாண்ட நிகழ்வு, உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button