உலகம்

நோர்வே மன்னர் ஹரால்டின் உடல்நிலைக் கவலைக்கிடம்

நோர்வே மன்னர் ஹரால்டின் Harald உடல்நிலை மோசமடைந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அரசவை இன்று அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் மிக வயதான மன்னரும், 1991 முதல் நோர்வேயின் சடங்கு ரீதியான அரசுத் தலைவருமான ஹரால்ட், ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராணி சோன்யா மற்றும் பட்டத்து இளவரசர் ஹாக்கன் Haakon ஆகிய இருவரும் திட்டமிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளனர்.

பட்டத்து இளவரசர் மற்றும் ராணி உட்பட ஹரால்டின் குடும்ப உறுப்பினர்கள், மன்னருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button