பலதும் பத்தும்

மின்சார வாகன கொள்வனவு பாரியளவில் அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வாகன விற்பனை வேகமெடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் பல்வேறு வகைகள் கிடைப்பதால் நுகர்வோர் அதிகளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகின்றது.

பெப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலையுயர்வு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால் ஐரோப்பா முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை சடுதியாக உயர்ந்துள்ளது.

போதுமான பொது சார்ஜிங் வசதிகள் இல்லாதது ஒரு முக்கியப் பிரச்சனையாகத் தொடர்கின்றது.

அத்துடன் எரிபொருள் விலைகள் குறைந்தால் மின்சார வாகனங்கள் மீதான நுகர்வோரின் ஆர்வம் குறையுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

எனினும் தற்போதைய சவாலை கடப்பதற்காக பெருமளவில் மின்சார வாகனங்களை கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button