பலதும் பத்தும்
2027 யு -19 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் இலங்கை அணியில் வட்டுக்கோட்டை மாணவி

2027 19 வயத்துக்குட்பட்ட(யு -19) மகளிர் உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டிக்கான 25 பேர் கொண்ட இலங்கைத் தேசிய குழாமில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த மாணவியான அக்ஷராஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் வட மாகாணத்திலிருந்தும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும் தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள முதல் பாடசாலை மாணவி எனும் வரலாற்றுப் பெருமையை அக்ஷராஸ்ரீ பெற்றுள்ளார்.
இந்த மாணவிக்குத் தொடர்ந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன
![]()