இலங்கை

ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்

சமகாலத்தில் ராஜபக்சர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த வீட்டில் நடத்தும் கூட்டங்களின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாமல் கருத்து வெளியிட்டு வருவதாக, அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.

கடந்த நாட்களில் விவசாயிகளை சந்தித்த சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்ச மீது நாமல் ராஜபக்சவினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

நாமலின் பிரச்சார இயக்கம்

நாமல் ராஜபக்ச முன்னெடுத்து வரும் பிரச்சார இயக்கம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில் | Namal Rajapaksas Shocking Behaviour

மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் இவ்வாறு செயற்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச தனது பிரச்சார இயக்கத்தின் அடிப்படையாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி அன்று வியத்மக அமைப்பை உருவாக்கினார்.

கீழ்த்தரமான அரசியல்

மருத்துவர் நாலக கொடஹேவ, பேராசிரியர் சன்ன ஜெயசுமன உள்ளிட்ட தரப்பினர் அந்த இயக்கத்தின் நிறுவனர்களாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள நாமல்! மகிந்த உட்பட பலர் கலக்கத்தில் | Namal Rajapaksas Shocking Behaviour

எனினும், நாமல் ராஜபக்சவின் பிரச்சார இயக்கம் மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்ற தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button