சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மின்சார விமானம்

நியூயார்க்கில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது, உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் 1,100 அடி உயரத்திற்குச் சென்று 27 நிமிடங்கள் வெற்றிகரமாகப் பறந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது.
இந்தப் பயணத்திற்காக வெறும் 477 ரூபாய் பெறுமதியான மின்சாரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகச் சம்மந்தப்பட்ட விமானத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், பேட்டரியில் இயங்கக்கூடிய தற்போதைய உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் என்ற வரலாற்றுச் சாதனையை இவ்விமானம் தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹார்ட் ஏரோஸ்பேஸ்’ (Heart Aerospace) நிறுவனம் எதிர்காலத்தில் 30 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கக்கூடிய வகையிலான வணிக ரீதியான மின்சாரப் பயணிகள் விமானத்தை உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()