சென்னை சுதந்திர தின விழாவில் த்ரிஷாவுக்கு முன்வரிசை ஆசனம்

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், நடிகை த்ரிஷா பங்கேற்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை த்ரிஷா , தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தின நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக நடிகை த்ரிஷா , தனது தாயார் உமாவுடன் வருகை தந்திருந்தார்.
இதன்போது விழா மேடையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் பக்கத்து நாற்காலியில் த்ரிஷா அமர்ந்தமை பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
![]()