உலகம்

உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்; முதலிடம் பிடித்துள்ள நாடு

உலகிலேயே பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள்

பட்டியல் சுவிட்சர்லாந்து, சராசரியாக பணியாளர்களுக்கு வழங்கும் ஆண்டு ஊதியம், 131,416 டொலர்கள் ஆகும்.

உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு | Swiss Tops In Highest Salary Paying Countries

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, லக்ஸம்பர்க், அந்நாடு, தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 108,672 டொலர்கள்.

அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன.

அமெரிக்கா தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 105,482 டொலர்கள், டென்மார்க் வழங்கும் ஆண்டு ஊதியம், 93,305 டொலர்கள்.

பட்டியலில் ஐஸ்லாந்து ஐந்தாவது இடத்தையும், அவுஸ்திரேலியா ஆறாவது இடத்தையும், பெல்ஜியம் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 89,075, 87,156, 86,773 டொலர்கள்.

அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது. அந்நாடு தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 82,403 டொலர்கள்.

டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்தை அமீரகமும், பத்தாவது இடத்தை ஜேர்மனியும் பெற்றுள்ளன. அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 82,076, 81,534 டொலர்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், நாட்டிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் இதே ஊதியம் கிடைக்கும் என உறுதியாக கூறமுடியாது.

உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு | Swiss Tops In Highest Salary Paying Countries

அதேபோல, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் அதிக ஊதியம் வழங்கினாலும், அந்த நாடுகளில் விலைவாசியும், வீட்டு வாடகை மற்றும் விலையும் அதிகம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

ஆகவே, ஒரு நாடு தன் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்குகிறது என்பதாலேயே, அந்நாட்டில் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும் என்னும் முடிவுக்கும் வந்துவிடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button