உலகம்

மேற்குக் கரையில் தொடரும் ஆக்கிரமிப்பு: புதிய குடியேற்றத்திற்கு இஸ்ரேல் அனுமதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவிற்கு வடக்கே உள்ள சின்ஜில் (Sinjil) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதக் குடியேற்றப் பகுதிக்கு (Settler Outpost) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய நிர்வாக உத்தரவுகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

பாலஸ்தீனச் செய்தி முகமையான Wafa இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனக் குடியேற்றம் ஆணையத்தின் (Palestinian Colonization and Wall Resistance Commission) அறிக்கையை மேற்கோள் காட்டி Wafaவெளியிட்டுள்ள செய்தியில்,

இஸ்ரேலின் ‘சிவில் நிர்வாகம்’ என அழைக்கப்படும் அமைப்பு, ‘கிவாத் ஹரேல்’ (Givat Har’el) குடியேற்றப் பகுதிக்கான எல்லை அதிகார வரம்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுய திட்டமிடல் மற்றும் விரிவாக்க அதிகாரங்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான ‘குடியேற்றப் பகுதியாக’ அதனை மாற்ற இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

கிவாத் ஹரேல் மற்றும் கிவாத் ஹாரோ (Givat Har’eh) ஆகிய இரு குடியேற்றப் பகுதிகளின் நிலையை வரன்முறைப்படுத்துவதற்காகப்பெப்ரவரி 2023-இல் இஸ்ரேலிய அரசால் தொடங்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button