தையிட்டி விகாராதிபதி வீதியை மூடியது தவறு; திறக்க நீதிமன்றம் அனுமதி

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்து. தவிசாளரையும் வழக்கில் இருந்து முற்றாக விடுத்திருந்தது.
இந்நிலையில்,இது குறித்து ஊடகங்களுக்கு தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது,
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்க வேண்டும் என விகாரதிபதிக்கு நாம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அவரால் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் எமக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த வீதியை விடுவிக்கும் நடவடிக்கையில் பிரதேச சபை மிக விரைவில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.
![]()