உலகம்

பங்களாதேசத்தில் புதிய ஜனாதிபதி தேர்வு ; தேர்தல் திகதி அறிவிப்பு

பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங்களாதேச ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

பங்களாதேசத்தில் புதிய ஜனாதிபதி தேர்வு ; தேர்தல் திகதி அறிவிப்பு | Bangladesh Elects President Election Date Announce

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த முகமது ஷஹாபுதீனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பங்களாதேச நாடாளுமன்ற கூட்ட அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேச அரசியல் சூழலில் முக்கியமான கட்டமாக இந்த ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button