இலங்கை

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம்

உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஏன் சேர்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து உரையாற்றிய அவர், சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது என்றும் தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் கைதை சுற்றி சூடுபிடித்துள்ள அரசியல் களம் | The Political Arena Is Heating Up Around Maithri

2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது. அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது” என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button