உலகம்

வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம்

சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிராமர் கடற்படை விமான தளத்தின் அருகாமையில், காலை 10:00 மணியளவில், கடற்படையை சேர்ந்த F-35B ரக விமானம் விபத்தில் சிக்கியதாக அத்தளத்தின் செய்தி தொடர்பாளர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்தார்.

விமானி வெளியே தூக்கி எறியப்பட்டார்; அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விமானி காயமடைந்தாரா அல்லது வேறு யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

ஆனால், அமெரிக்க இராணுவம் இது குறித்த விவரங்களை பின்னர் வழங்கும் என்று அவர் கூறினார். தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.

F-35B என்பது மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன ‘ஸ்டெல்த்’ ரக போர் விமானத்தின் பல வகைகளில் ஒன்றாகும்.

இதன் ‘B’ வகையானது, குறுகிய தூரத்திலேயே வானில் எழும்பி செல்லும் வகையிலும், செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை கொண்டுள்ளது.

சான் டியாகோ தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கேண்டஸ் ஹேட்லி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஏற்பட்ட தாவர தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறினார். அவர் இந்த சம்பவம் குறித்த இதர கேள்விகளை மிராமாரிடம் கேட்குமாறு குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button