பலதும் பத்தும்

ஜப்பானின் பூர்வீக குடிமக்களில் பாரிய வீழ்ச்சி – ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டினர்

ஜப்பானில் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூர்வீக மக்கள் தொகை 120 மில்லியனுக்கும் குறைவாகக் குறைந்துள்ளதுடன் வெளிநாட்டினர் அதிகரித்துள்ளனர்.

உள்விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் வசிக்கும் ஜப்பானியர்களின் எண்ணிக்கை 119.74 மில்லியனாக காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக 17வது ஆண்டாக ஏற்படும் வருடாந்திர சரிவைக் குறிக்கிறது.

பதிவுகள் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை மற்றும் சதவீதம் ஆகிய இரண்டிலும் மிகக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இது குறிக்கிறது. (இவை ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கான கணிப்பு ஆகும்)

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, பெண்கள் கருவுறும் வீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள் தொகை சுருங்கி வரும் வேளையில், வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக நான்கு மில்லியனைத் தாண்டி, சாதனை அளவை எட்டியுள்ளது.

நாட்டின் மக்கள்தொகை சரிவைச் சமாளிக்க, குழந்தை பராமரிப்பு ஆதரவை விரிவுபடுத்துதல், வீட்டு மானியங்கள் மற்றும் அரசாங்க ஆதரவுடனான திருமண ஏற்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button