உலகம்

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு பிரிஸ்பேனில் 89 நாட்கள் சிறைத்தண்டனை!

பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ‍இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார் என தி கூரியர் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. பிராந்தியசெய்தி

தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்தனர்; பின்னர் அவர்கள் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.

ஆனால் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்றனர்; அப்போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஆனால் நீதிபதி அவரது வாதத்தை நிராகரித்தார்.

இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.

சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button