உலகம்

ஈரானுடன் சுமூகமான பேச்சுவார்த்தை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானின் கோரிக்கைக்கு அமைய அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நேரடியாகவும், பிரதிநிதிகள் ஊடாகவும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் சாதகமான மற்றும் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஈரானுடன் சுமூகமான பேச்சுவார்த்தை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | Smooth Talks With Iran Trump Announces Action

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் நல்லதொரு முடிவை எட்டுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் விளைவாகவே ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button