இலங்கை

இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் – அதிமுக்கிய அரசியல் வாதிகளுடன் சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரைத் தவிர, வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.

இந்தியாவுக்கு சென்ற நாமல், ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளைச் சந்தித்துள்ளார்.

இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு

இதன்போது நாமலுக்காக பிரத்யேகமாக சைவ இரவு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு இரகசிய பயணம் மேற்கொண்ட நாமல் - அதிமுக்கிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பு | Namal S Secret Indian Visit

எனினும் நாமல் சந்தித்துக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே ஒரு நாள் மட்டும் தங்கியிருந்த நாமல், மறுநாள் இரவே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button