உலகம்

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஸ்டாலினிசக் கட்சி அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) ஸ்டாலினிசக் கட்சி (Stalinist Party) அல்ல என, அக்கட்சியின் நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பில்ப் (Chris Philp) தெரிவித்துள்ளார்.

கட்சியின் சில முக்கிய கொள்கைகள் பேச்சுவார்த்தைக்கு உட்படாதவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும், நலத்திட்டங்களை சீர்திருத்த வேண்டும் மற்றும் நிகர பூஜ்ஜியக் கொள்கைகளை (Net Zero Policies) கைவிட வேண்டும் என்பவை
கட்சியின் அடிப்படை கொள்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கைகளை ஆதரிக்காத எவரும் அடுத்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராகவோ
அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்க முடியாது எனவும் அக்கட்சியின் நிழல் உள்துறைச் செயலாளர் கிறிஸ் பில்ப் (Chris Philp) கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button