உலகம்

‘ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரல்’ – உமா குமரனுக்கு உயரிய அங்கீகாரம்

Stratford and Bow தொகுதியின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன், வெளியுறவுத் துறையின் ராஜாங்க அமைச்சராகவும் (junior Foreign Office minister) உதவி கொறடாவாகவும் ஆகவும் (Assistant Whip)
நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து Stratford and Bow தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார். எனினும்,, வெளியுறவு விவகாரக் குழுவிலிருந்து விலகுவதோடு, எழுத்துப்பூர்வ நாடாளுமன்றக் கேள்விகளைக் கேட்கும் உரிமையையும் இழக்கிறார்.

உமா குமரனின் இந்த நியமனம், வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற கீழ்-செயலாளராகவும் (Parliamentary Under-Secretary of State) அமைகிறது.

இதற்கான ஒப்புதலை மன்னர் வழங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரிவான அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைந்துள்ளது.

போரால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து, பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றார். இதனால் ஈழத் தமிழர்களின் சர்வதேசக் குரலாக பார்க்கப்படுகின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button