உலகம்

அயர்லாந்தில் தாக்குதலுக்கு திட்டம் : வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்துடன் இருவர் கைது

வட அயர்லாந்துடனான எல்லைக்கு அருகே வெடிகுண்டு நிரம்பிய வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 20 வயது நிரம்பிய பெண் ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனம் வெடிபொருள் அகற்றும் குழுவின் உதவியுடன் ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணம் கருதி முடிவுகளை அரசாங்கம் வெளியிடவில்லை.

வட அயர்லாந்தில் தாக்குதல் நடத்துவதற்காக எல்லையைக் கடந்து காரில் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button