உலகம்

எங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.

அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button