பலதும் பத்தும்

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகம்!

ஜப்பானில் 1 – 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தைங்களின் எண்ணிக்கை 13.29 மில்லியனாக இருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 15.67 மில்லியனை தாண்டியிருக்கிறது.

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகம்! | Japan Pets Exceeds The Number Of Children

திருமணம் செய்யும் ஆர்வம் இல்லை
ஜப்பான் மக்கள் ஒழுக்கம், சுத்தம், கடின உழைப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் போனவர்கள். ஜப்பான் மக்கள் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இரண்டையும் தங்கள் கலாச்சாரத்தில் கலந்து வாழ்ந்து வருபவர்கள்.

அதேநேரம், கடந்த பல வருடங்களாகவே ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஒருபகக்ம், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள்.

நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜப்பான் அரசு தொடர்ந்து கூறியும் இளைஞர்கள் தயங்குகிறார்கள்.

குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே, ஜப்பானியர்கள் மன ஆறுதலை போக்குவதற்காகவும், துணைக்காகவும் பலரும் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button