உலகம்

அல்ஜீரியாவில் தீப்பரவல் – 11 பேர் பலி

அல்ஜீரியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அல்ஜியர்ஸின் மொஹமதியா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை சிவில் பாதுகாப்புப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியா கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலையினால் தவித்து வரும் நிலையில், ஒரே வாரத்தில் சுமார் 1,000 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button