பலதும் பத்தும்

பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்!

நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற சம்பவம்  பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தைச் சேர்ந்தவர்  தான்சனிச்சரா போட். இவரது தந்தை புதிராம், தாய் ஜராலி ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.

பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்! | Elephant Kills Four Members Of Same Nepal Family

 

காட்டு யானை ”துர்பே”

இதனால் அதிர்ச்சியடைந்த சனிச்சரா போட், தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக மாடி கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆனால், கடந்த 12-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த அதே காட்டு யானை ‘துர்பே’, சனிச்சரா போட்டின் மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட்டை தாக்கிக் பலியாக்கியுள்ளது.

இதுகுறித்து சனிச்சரா போட் கூறுகையில், “யானையிடம் இருந்து தப்பிக்க ஆற்றைக் கடந்து தொலைவில் குடியேறினோம். 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், என் பெற்றோரை கொன்ற அதே யானை மீண்டும் வந்து என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.

பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்! | Elephant Kills Four Members Of Same Nepal Family

நேபாளத்தில் மிகவும் ஆபத்தான காட்டு யானையாக கருதப்படும் ‘துர்பே’, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை 25 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பலமுறை அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததும் இந்த யானைக்கு என்று தனியே ‘விக்கிப்பீடியா’ உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் இணையத்தில் தற்பாது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button