இலங்கை

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள்!

மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து (13) விசேட ஊடக சந்திப்பை நடத்தியிருந்தன.

இந்த விசேட ஊடக சந்திப்பானது கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில்  (13) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாகாணசபை தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் காணி விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய மூன்று கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த 6 கட்சிகளும் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது அல்லது ஒரே தலைமையின் கீழ் செயற்படுவது போன்ற எவ்வித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button