உலகம்
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கடும் வெப்ப அலை – குளிர்சாதனங்களுக்கு தட்டுப்பாடு

சூரிச்: சுவிட்சர்லாந்தில் ஜூலை 7 முதல் மீண்டும் கடும் வெப்ப அலை வீசும் என MeteoNews வானிலை சேவை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான வறட்சியால் காட்டுத் தீ அபாயமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், எடுத்துச் செல்லக்கூடிய ஏர் கண்டிஷனர்களுக்கு கடும் தேவை ஏற்பட்டதால் Galaxus மற்றும் Interdiscount உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருப்பு விற்றுத் தீர்ந்துள்ளது. புதிய சரக்குகள் குறைந்தளவிலேயே கிடைக்கும் என விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பற்றாக்குறையை பயன்படுத்தி, சிலர் இணைய மறுவிற்பனை தளங்களில் ஏர் கண்டிஷனர்களை வழக்கத்தை விட பல நூறு பிராங்குகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
![]()