பாப் பாடகி குறித்து தவறான கருத்து ; பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்

ஆஸ்திரேலியப் பாப் பாடகி கைலி மினாக் குறித்துப் பொது மேடையில் தெரிவித்த ஆபாச கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் தொகுத்து வழங்கிய நிகழ்வில், பாடகி கைலி மினாக், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் மற்றும் ஆஸ்திரேலிய கலைஞர் ரோண்டா பர்ச்மோர் ஆகிய மூவரைப் பற்றிக் கவர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆரம்பத்தில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்த பிரதமர் அல்பனீஸ், தொகுப்பாளர் தொடர்ந்து வற்புறுத்திக் கேள்வி எழுப்பியதால், ஒரு கட்டத்தில் பிரதமர் அல்பனீஸ் பாடகி கைலி மினாக் குறித்த கேள்விக்கு கூறிய பதில் ஆபாசமானதாகவும் பெண்களை இழிவுபடுத்தும் தொனியிலும் அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
பிரதமரின் பேச்சுக்கு ஆஸ்திரேலிய பெண் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியில் இருக்கும் ஒரு நபர், பொதுவெளியில் பெண்களைப் பற்றி இவ்வாறு பேசுவது அந்தப் பதவிக்கே அழகல்ல என்று பலரும் சாடினர்.
அழுத்தம் வலுத்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நான் தெரிவித்த கருத்துக்களுக்காக எவ்வித நிபந்தனையுமின்றி எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()