உலகம்

ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச் சடங்கு: காண்போரை உலுக்கிய சிறிய சவப்பெட்டி

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் இறுதிச் சடங்கில் வைக்கப்பட்ட அவரது பேத்தியின் சவப்பெட்டி அங்கிருந்தோரை உலுக்கி எடுத்தது.

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட காமேனி

கடந்த பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

அவருடன் இந்த தாக்குதலில், காமேனியின் மூத்த மகள், மருமகன், மருமகள், மற்றும் 14 மாதப் பேத்தி ஜஹ்ரா ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமான மோதல் கடந்த 4 மாதங்களாக நீடித்து வந்த நிலையில் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறாமல் இருந்தது.

அவர்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.

இறுதி அஞ்சலி

இந்நிலையில், இருதரப்பிற்கும் இடையிலான போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கு தலைநகர் தெஹ்ரானில் நேற்று தொடங்கியது.

அவர்களது உடல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 9ம் திகதி உச்ச தலைவர் காமேனியின் சொந்த ஊரான மஷ்ஹாரில் முறைப்படி அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச் சடங்கு: காண்போரை உலுக்கிய சிறிய சவப்பெட்டி | Iran Leader Khamenei Funeral Ceremony Viral Image

தற்போது தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் அனைவரது உடலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை உலுக்கிய சவப்பெட்டி

ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச் சடங்கு: காண்போரை உலுக்கிய சிறிய சவப்பெட்டி | Iran Leader Khamenei Funeral Ceremony Viral Image

அஞ்சலிக்காக வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் அங்கிருந்த ஒரு காட்சி மிகவும் உலுக்கியது.

காமேனியின் 14 மாத பேத்தியான ஜஹ்ரா முகமது கோல்பயேகானியின் சவப்பெட்டியும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறிய சவப்பெட்டி காண்போரின் இதயங்களை உலுக்கி எடுத்தது.

ஈரான் தேசிய கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டி போரின் கொடூரத்தையும் மனித உயிர் இழப்பின் துயரக் காட்சியையும் உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button