இலங்கை

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகனின் சொகுசு வாகன மோசடி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன், சுங்க வரிகளை தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை நாட்டிற்குள் கடத்திய கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த கும்பல் முந்தைய அரசாங்கங்களின் போதும் இந்த கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வாகனங்கள்

கொள்கலன்களில் மறைத்து, திட்டமிட்ட முறையில் நாட்டிற்குள் கடத்தப்பட்ட பல வாகனங்கள் குறித்த தகவல்களையும் குற்றப் புலனாய்வு பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

அந்த வாகனங்களை பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்தி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மகனால் நாட்டிற்குள் கடத்தப்பட்ட வாகனங்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட ஒரு வாகனம் குறித்த விசாரணையின் போது, ​​அந்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் என்று கூறப்படும் ஒரு அரசியல்வாதியின் மகன், பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு சுங்க வரிகளைச் செலுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, வரி செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

 குற்றப்புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைப்பு

இதனையடுத்து குற்றப் புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட ஒரு விசாரணையின் போது, ​​இதேபோன்ற மற்றொரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகனின் சொகுசு வாகன மோசடி அம்பலம் | Former President Son Involved In Vehicle Smuggling

மேலும், குறித்த வாகனத்தின் உரிமையாளர், அது முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு சொந்தமானது என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனம் இலங்கை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால், அதற்கான வரியைச் செலுத்தி அந்த வாகனத்தை விடுவிக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் வரும் வாரத்தில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button