இலங்கை

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான ஹரக் கட்டா அல்லது நதுன் சிந்தக்கவிடமிருந்து பணம் பொற்றுக்கொண்ட பட்டியல் நீண்டு செல்வதாகவும் இதில் பெரும் புள்ளிகள் சிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் பெரும் இலஞ்சம் கொடுத்த சம்பவமாக இது பதிவாகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது ‘ஹரக் கட்டா’வின் மூத்த சகோதரர் (லொகு மல்லி) அளித்த வாக்குமூலத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேரம் பேசப்பட்ட பல கோடி ரூபா

ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கான ஒரு திட்டவட்டமான செய்தி கிடைத்ததன் பின்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், இருபது கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதாக லொகு மல்லிய கூறியிருக்கிறார்.

News

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம் | Nadun Chinthaka Widely Known As Harak Kata

அவ்வாறு கோடிக்கணக்கான பணம் ஒரு நபருக்கு வழங்கப்பட்டதா அல்லது ஹரக் கட்டாவை கொலை செய்வது மற்றும் தடுப்பு காவலை நிறுத்த உதவிய அனைவருக்கும் பணம் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

அதேபோல், மேலும் பணம் பெற்றுக் கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் (DIG) உயர் பதவியில் உள்ள டி.ஐ.ஜி அதிகாரிகள் இருவர் உள்ளனர். சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளனர்.

ஒரு டி.ஐ.ஜி அதிகாரி இந்த விபரங்களை அறிந்த நபரை அச்சுறுத்தியுள்ளார். இந்த டீலை பேசுவதற்காக ஒரு சட்டத்தரணி அடிக்கடி சென்றுள்ளார்.

அந்தச் சட்டத்தரணி தான் அனைத்து டீல்களையும் கொண்டு சென்றுள்ளார். அவ்வாறான சில சந்தர்ப்பங்களில் மூன்று கோடி வரை பேசப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஒரு அரசியல்வாதியும் இருக்கிறார். மேலும் சிரேஷ்ட டி.ஐ.ஜி (Senior DIG) ஒருவர் தனது செயலாளரை அனுப்பி பேரம் பேசவைத்துள்ளார். அவர்களும் மூன்று கோடி வரை பெற்றதாகத் ஆதாரங்கள் உள்ளன.

ஹரக் கட்டா வழங்கிய கோடி கணக்கான பணம்

ஹரக் கட்டா 12 முதல் 20 கோடி வரை ஆறு, ஏழு பேருக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். கீழ் நிலை பொலிஸ் அதிகாரி துபாய்க்கு (Dubai) சென்று பணத்தைப் பெற்று உண்டியல் செய்துள்ளார்.

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம் | Nadun Chinthaka Widely Known As Harak Kata

 

இந்த தகவல்கள் அனைத்தும் வாக்குமூலத்தில் உள்ளன. இவை அனைத்தையும் நதுன் சிந்தக்க எனப்படும் ஹரக் கட்டா அறிவார். ஹரக் கட்டா இன்றுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர் பயப்படுகிறார்,

பொலிஸ் காவலில் இருக்கும் போது இந்த உண்மைகளை வெளிப்படுத்தினால் தனக்கு ஆபத்து என்பதால் மௌனமாக இருக்கிறார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தற்போது தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடுத்த வாரம் இது ஒரு அதிரடித் திருப்புமுனை வழக்காக மாறும் என்றும், இதில் ஊகிக்க முடியாத கோடிக்கணக்கான பணம் கைமாறியுள்ளமை வெளிவரும் என்றும் கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button