இலங்கை

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மைத்திரி

தாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தற்போது ஓய்வூதியம் கூட கிடைப்பதில்லை என்பதால், சாதாரண மக்களை விடவும் பொருளாதார நெருக்கடியை தாம் அதிகமாகவே உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

உங்களை விட பொருளாதார சுமை எனக்குத்தான் அதிகமாகத் தெரிகிறது. ஏன் தெரியுமா? உங்களுக்கு மாதமொருமுறை ஏதோ ஒரு சம்பளம் கிடைக்கிறது அல்லவா? ஆனால் எனக்கு இப்போது ஓய்வூதியம் கூட இல்லை.

அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. அப்படியிருக்கும் போது உங்களை விட எனக்குத்தானே வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக இருக்கும்?” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து தம்மால் திட்டவட்டமான கருத்து எதனையும் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது செயற்பாட்டு அரசியலில் ஈடுபடவில்லை என்பதால், அரசாங்கத்தின் இத்தகைய முடிவுகள் குறித்து கருத்து தெரிவிப்பது கடினம் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தாம் இப்போது ஆட்சி செய்யவில்லை. நான் ஒரு பொருளாதார நிபுணரும் அல்ல. சர்வதேச ரீதியிலும் இதனைப் பார்க்க வேண்டும். ஒருபுறம் போர் நிலவியது. எனவே, நாட்டின் பொருளாதார நிபுணர்களும் அரசாங்கமும் எடுக்கும் தீர்மானங்களைப் பொறுத்தே இது அமையும் என தெரிவித்துள்ளார்.

யார் நாட்டை வழிநடத்தினாலும் பரவாயில்லை, மக்களுக்கு ஒரு நல்ல பொருளாதாரத்தை உருவாக்கி, வறுமையைக் குறைத்து, பிள்ளைகளுக்கு ஒரு நல்ல நாட்டை உருவாக்கினால் அதுவே போதுமானது” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button