உலகம்

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனின் மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி அடைந்த தோல்விக்கு, பிரதமர் கீர் ஸ்டார்மரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வாக்காளர்களின் தீவிர எண்ணமே காரணம் என ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகளின்படி, ரிஃபார்ம் யுகே வேட்பாளர் ராப் கென்யோனை (Rob Kenyon) விட 9,000 இற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தொழிற்கட்சி வேட்பாளர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வெற்றி பெற்றுள்ளார்.

இந்த அந்நிலையில் இத்தோல்வி தமக்கு ஏமாற்றமளிப்பதாக நைஜல் ஃபரேஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேக்கர்ஃபீல்ட் தொகுதியானது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிற்கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது.

இம்முறை அங்கு ஆண்டி பர்ன்ஹாமை வீழ்த்துவதன் மூலம், அடுத்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சியாகத் தாங்களே உருவெடுப்போம் என்பதை நிரூபிக்க ரிஃபார்ம் யுகே கட்சி திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில் ரிஃபார்ம் யுகே கட்சியின் திட்டம் நிறைவேறாமல் போயுள்ளதுடன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மீதான மக்களின் அதிருப்தியால், மாற்று இராஜதந்திர நகர்வாக வாக்காளர்கள் பர்ன்ஹாமை நோக்கித் திரும்பியதே ரிஃபார்ம் யுகே கட்சியின் இந்தத் பின்னடைவுக்குக் காரணம் என ஃபரேஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button