இந்தியா

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது.

34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 10ஆம் திகதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது. தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது. இதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு த.வெ.க.வினர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button