இலங்கை

நாணயங்களுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு – செம்மணி மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் இருந்து 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள்  (16) நடைபெற்றது.

இன்றைய அகழ்வு பணியின் போது, 2 சிறுவர்கள் உட்பட 06 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை இரண்டு நாணயங்களை ஒட்டியவாறு என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையிலான அகழ்வு பணிகளின்போது, 366 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button