இந்தியா
134.83 கோடி ரூபா மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்!

134.83 கோடி ரூபா மதிப்பில் குறுவை சிறப்பு சிறப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 134.83 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு 77.50 கோடி ரூபா, டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57.33 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்.
குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()