இலங்கை

சங்கீத்சனின் விடுதலை ஜனாதிபதியுடன் பேசிய சிறிதரன்

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக் கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீதனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button