இலங்கை

ஆறாவது நாளாகவும் வீதியில் யாழ். சுகாதார தொண்டர்கள் – தீர்வு தேடி கொழும்பு சென்ற பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றும் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து பேசுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்றையதினம் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button