பலதும் பத்தும்

சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி அல்வா… வெறும் 10 நிமிடம் போதுமாம்

செட்டிநாடு ஸ்பெஷலாக இருக்கும் கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யப்படும் அல்வா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா.. ஈசியா டக்குன்னு வீட்டில் செய்யலாம்.

கருப்பு கவுனி அரிசியோட டேஸட்டும் சூப்பரா இருக்கும். அதோட ஊட்டச்சத்தும் உடலுக்கு கிடைக்கும். 5 நிமிடத்தில் டக்குன்னு எப்படி சமைக்கிறதுனு வாங்க சொல்லுறேன்.

தேவையான பொருட்கள்

கருப்பு கவுனி அரிசி
தேங்காய்
வெல்லம்
முந்திரி
உலர் திராட்சை
நெய்

சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி அல்வா... வெறும் 10 நிமிடம் போதுமாம் | How To Prepare Chettinad Style Black Rice Halwa

செய்முறை

ஒரு கப் கவுனி அரிசி எடுத்துக் கொண்டு சமைக்கும் முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது ஊற வேண்டும். ஊறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

பின் தேங்காய் எடுத்து ஒன்றரை கப் தேங்காய் தண்ணீர் வரும் வரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த கவுனி அரிசி மற்றும் தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி அல்வா... வெறும் 10 நிமிடம் போதுமாம் | How To Prepare Chettinad Style Black Rice Halwa

இத்துடன் ஒரு கப் வெல்லம் எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொண்டு அடுப்பில் பேன் வைத்து பேனில் சேர்த்து வேகவிடவும்.

வெந்தபின் நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வேகவிடவும், வெந்தபின் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்தால் நெய் மனம் கமகமக்க செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா தயாராகிரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button