பலதும் பத்தும்

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர்

பொதுவாகவே பெற்றோராக, ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைக்கு எந்த விடயத்திலும் சிறந்ததை கொடுக்கதான் விரும்புவார்கள். தன் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர்கள்.

ஆனால் தங்களை அறியாமலேயே குழந்தைகளுக்கு சில விடயங்களை தவறாக கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். நாம் சில விடயங்களை குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது. மாறாக இது நமது நடத்தையின் மூலம் தான் புரிந்துக்கொள்கின்றார்கள்.

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்! | How To Teach Privacy To Kids Good Touch Bad Touch

அதி்ல் முக்கியமான விடயம் தான் குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றுவது. பொதுவாகவே இந்த பழக்கம் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகின்றது. குழந்தைகள் தானே என நினைத்து இவர்கள் முன்னிலையில் ஆடை மாற்றுவது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஏன் தவறு?

பொதுவாகவே இந்த குழப்பம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருக்கும். ஆனால் நாம் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைகள் நமது நடத்தைகள் ஒவ்வொன்றையும் இவர்களை அறியாமலேயே உன்னிப்பாக கவனிக்கின்றார்கள். அதனை பின்பற்றவும் செய்கின்றார்கள்.

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்! | How To Teach Privacy To Kids Good Touch Bad Touch

 

அந்தவகையில், சிறுவர்கள் முன்னிலையில் நாம் உடைமாற்றுவதை அவர்கள் பார்க்கும் போது, யார் முன்னிலையிலும் உடை மாற்றலாம் இது தவறில்லை என்ற எண்ணம் இவர்களுக்குள் குழந்தை பருவத்திலேயே ஆழமாக பதிந்துவிடும்.

எனவே மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் ஆடை மாற்றுவதை தவிர்ப்பதே சிறந்தது. அம்மா உடை மாற்ற போகின்றேன் கொஞ்சம் வெளியில் இரு… கதவை மூடு என்று சொல்லும் போது குழந்தைகளுக்கு மற்றவர்களின் தனியுரிமையையும் மதிக்க வேண்டும் என்பது புரியும்.

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்! | How To Teach Privacy To Kids Good Touch Bad Touch

 

குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே மற்றவர்களின் தனியுரிமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

தனிப்பட்ட பகுதிகளில் ஆடைகளை மாற்றுவதன் மூலம், தனிப்பட்ட இடம் மற்றும் தனியுரிமையின் மதிப்பை நீங்கள் நிரூபிக்கிறீர்கள்.

உடைகளை மாற்றும் போது குழந்தைகளின் தனியுரிமையை அனுமதிப்பது அவர்களுக்கு உடல் சுயாட்சி மற்றும் சம்மதம் பற்றி கற்றுக்கொடுக்கிறது.

குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றும் பெற்றோர் - இந்த பதிவு உங்களுக்கு தான்! | How To Teach Privacy To Kids Good Touch Bad Touch

 

அவர்களின் உடலை யார், எப்போது பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

தற்காலத்தில் குழந்தைகள் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. அந்நிலையில் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனியுரிமையின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button