உலகம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தைகள் எத்தகைய முடிவை நோக்கிச் செல்லும் என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“இந்த பேச்சுவார்த்தைகள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால், நான் ஈரானிடம் கூறியது போல, ‘எப்படியாவது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் இதுதான்’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் “தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button