உலகம்

கென்யா மாணவிகள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி

கென்யாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய கென்யாவின் கில்கில் பகுதியிலுள்ள உதுமிஷி பெண்கள் அகாடமி மேல்நிலைப் பாடசாலை விடுதியில், மாணவிகள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்த மாணவிகளை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தீயணைப்பு படையினருக்கு இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகே தகவல் வழங்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button