இந்தியா
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரம்ப விழா திடீரென ரத்து

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, புதிதாக அமைந்துள்ள தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படைத்திட்டமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் (மே.29) ஆரம்பித்து வைக்க இருந்தார்.
இந்நிலையில் நாளை நடக்கவிருந்த தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
![]()