உலகம்

ஈரான் போா் நெருக்கடி; மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.

அரசுப் பணிகள் மற்றும் நாட்டின் மீதான பொறுப்புகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் சமூக ஆர்வலர் பெட்டினா ஆண்டர்சன் ஆகியோரின் திருமணம் பஹாமாஸ் தீவில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் சிறிய அளவில் நடைபெறவுள்ளது.

இவர்கள் ஏற்கனவே சட்டபூர்வமாக திருமணம் செய்துகொண்டதாகவும் ஃபுளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், “மகனின் திருமணத்தில் பங்கேற்க மிகவும் விரும்பினாலும், இந்த முக்கியமான காலகட்டத்தில் வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமணத்திற்கு சென்றாலும் அல்லது செல்லாவிட்டாலும் ஊடகங்கள் விமர்சிக்கும் நிலை இருப்பதாகவும், இதனால் எந்த முடிவும் சர்ச்சையாக மாற்றப்படுவதாகவும் கூறி ஊடகங்களை விமர்சித்தார்.

மேலும், ஈரான் உள்ளிட்ட சர்வதேச நெருக்கடிகள் மற்றும் அரசுப் பணிகளின் அழுத்தம் காரணமாக தற்போது தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேநேரத்தில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன் ஈரான் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், டிரம்ப் தனது பயணத் திட்டங்களை ரத்து செய்து வெள்ளை மாளிகை திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button