முச்சந்தி

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவளத் திணைக்களத்தின் ஆதரவுடன் 40 ஏக்கர் காடழிப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக உள்ள ஒதுக்குக்காடு சுமார் 40 ஏக்கர் வரையில் தற்போது அழிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் வனவள திணைக்களத்திற்கும் தொடர்புள்ளது.காடழிப்பு நடைபெறும் இடத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் வனவள திணைக்களத்தின் அலுவலகம் உள்ளது. இருப்பினும் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் திரிவைத்தகுளம் காடு சிங்கள மக்களால் வெட்டப்பட்ட போது இதே வனவள திணைக்களம் கண்டும் காணாமல் இருந்தது.

அதேவேளை தங்களது சொந்த வயல் நிலத்தை துப்பரவு செய்யும்போது தமிழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.

திரிவைத்தகுளம் விவசாயிகளுக்கு எதிராக 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2025வரை மேற்படி காணிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட வனமென வழக்கை நடாத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்திய வனவள திணைக்களம் 2021இலேயே அந்தக் காட்டை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவித்துள்ளார்கள்.

ஆனால் விவசாயிகளை தண்டிப்பதற்காக அந்த தினைக்களத்துடன் தொடர்பில்லாத இடத்திற்காக வழக்கை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button